தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் : வலைகளை அறுத்தும் அட்டூழியம்

257

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்சென்றனர். கச்சத்தீவு அருகே
நேற்று மாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். மேலும், வலைகளை அறுத்து எறிந்தும், பத்துக்கும் மேற்பட்ட படகுகளை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் உயிர் பிழைத்தால் போதும் என மீனவர்கள் அவசர அவசரமாக கரைதிரும்பினர். இலங்கை கடற்படையின் தாக்குதலால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.