ஹஜ் புனிதக் கடமையை நிறைவேற்ற மெக்காவில் குவியும் மக்கள்!

407

இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளுள் ஒன்றான ஹஜ் பயணத்தை முன்னிட்டு, மெக்காவில் ஹஜ் பயணிகள் குவிந்துள்ளனர்.
இஸ்லாமிய மக்களின் வாழ் நாளில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளுள் “ஹஜ் பயணமும்” ஒன்று. இதன் காரணமாக
உலக நாடுகள் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று இரவு நேரம் மெக்கா மசூதியில் நடந்த தொழுகையில், புனித அல்-கபா வை சுற்றி ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டனர். ஹஜ் பயணிகளின் வருகையை முன்னிட்டு சவுதியில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.