ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது..!

319

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எஃப்சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணி 2 கோல்களை அடித்தது. தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணியினர், மேலும் ஒரு கோலை அடித்தனர். இதன் மூலம் 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தியது. இதன்படி, சென்னை அணி தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.