ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையை வீழ்த்திய கோவா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

259

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையை வீழ்த்திய கோவா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
3வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதன் 53வது லீக் ஆட்டம் கோவா மாநிலம் படோர்டாவில் நடைபெற்றது. இதில் சென்னையின் எப்.சி. அணியும், எப்.சி. கோவா அணியும் மோதின. அரையிறுதி வாய்ப்பை இழந்த இரு அணிகளும், ஆறுதல் வெற்றிக்காக விளையாடின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பில், சென்னை அணி வீரர் கோல் அடித்தார். அடுத்த 2வது நிமிடத்தில் கோவா அணி வீரர் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் கோவா அணி 5க்கு4 என்ற கோல் கணக்கில் சென்னையை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு இதே இடத்தில் கடைசி நிமிட கோலால் சென்னையிடம் தோல்வியை தழுவிய கோவா அணி இந்த முறை அதே போன்று பழிதீர்த்த திருப்தியுடன் வெளியேறியது. இந்தஆட்டத்தில் மொத்தம் 9 கோல்கள் அடிக்கப்பட்டன. ஐ.எஸ்.எல். கால்பந்து வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச கோல் எண்ணிக்கை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.