3 பிர­பல வணிக நிறு­வ­னங்கள் மூலம் கேரள முஸ்லிம் அறக்­கட்­ட­ளைக்கு நன்­கொடை! ஐ.எஸ்.தொ­­டர்பு அம்­ப­லம்!!

278

கொச்சி, ஜூலை.30–
தொலைக்­காட்சி பிர­சா­ர­கரும், இஸ்லா­மிய ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்­து­ப­வ­ரு­மான ஜாகிர் நாயக்­குடன் நெருங்­கிய தொடர்பு கொண்ட முஸ்லிம் அறக்­கட்­ட­ளைக்கு, கேர­ளாவின் 3 பிர­பல வணிக நிறு­வ­னங்கள் நன்­கொ­டை அளித்த குட்டு அம்­ப­ல­மாகி உள்­ளது.
ஐ.எஸ். தீவி­ர­வா­திகளின் ஆத­ர­வா­ளர்­க­ளான அர்­சித்­கு­ரேசி, மற்று­ம் ரிஸ்வான் கான் ஆகிய 2 பேரும் மும்­பையில் காவல்­து­றை­யி­னரால் கைது செய்­யப்­பட்டு கொச்­சிக்கு கொண்­டு வரப்­பட்­டனர். இரு­வ­ரையும் விசா­ரித்­­ததில் பல திடுக்­கி­டும் உண்­மைகள் வெளி­ப்­பட்­டன.
3 வணிக நிறு­வ­னங்கள்
கேர­ளா­வி­லுள்ள 3 முன்­னணி வணிக நிறு­வ­னங்கள், ஒரு முஸ்லிம் அறக்­கட்­ட­ளைக்கு அவ்­வப்­போது நன்­கொடை வழங்­கு­வ­துண்டு. இந்த அறக்­கட்­ட­ளையும், ஜாகிர் நாயக் நடத்­தி­வரும் இஸ்­லா­மிய ஆய்வு மையம் (ஐ.ஆர்­.எப்.) என்ற அமைப்பும் நெருங்­கிய தொடர்­பு கொண்­டவை.
முஸ்லிம் அறக்­கட்­டளை சார்­பாக அனேக பள்­ளிக்­­கூடங்­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன. இவர்­க­ளுக்கு கேரள மாநி­லத்­தி­லுள்ள வைத்­திலா என்­ற­ இடத்தில் ஒரு கல்வி மையம் உண்டு. தற்­போது கைதாகி உள்ள ரிஸ்வான் கான் இந்த கல்வி மையத்­திற்கு பல முறை சென்­றுள்­ளது தெரிய வரு­கி­றது.
கேரள மாநி­லத்தை சேர்ந்த நன்கு படித்த இளை­ஞர்கள் பலர், தங்கள் மனை­வி மற்றும் குழந்­தை­க­ளுடன் ஏற்­க­னவே சிரி­யா நாட்­டிற்கு சென்­றுள்­ளனர். மதம் தொடர்­பாக மேலும் கற்று ஆய்வு செய்­வ­தற்­காக சிரியா செல்­வ­தாக விசா விண்­ணப்ப படி­வத்தில் இவர்கள் தெரி­வித்­தி­ருந்த போதிலும், இவர்­க­ளு­­டைய உண்மை­யான நோக்கம் ஐ.எஸ். அமைப்பில் சேரு­வது என கூறப்­ப­­டு­கி­றது.
தொடர்­பு
இவ்­விதம் சிரியா சென்­ற­வர்­களில் கேரள மாநிலம், காசர்கோடி­லுள்ள திரி­க­ரிப்பூர் என்ற இடத்தை சேர்ந்த ரசீத் அப்­துல்லா என்­ப­வரும் ஒருவர். இவ­ருக்கும், இதேபோல் சிரியா சென்ற பெஸ்டின் வின்சென்ட் என்ற யாகியா, மற்றும் அவ­ரது மனைவி மெரின் ஜேக்கப் என்ற மரியம் ஆகி­யோ­­ருக்கும் இடை­யே நெருங்­கிய தொடர்பு இருந்­­துள்­ளது.
மும்­பை­யி­லுள்ள ஒரு நிறு­வ­னத்தில் வேலை பார்த்த மெரின் ஜேக்கப், தன் பணியை ராஜி­னாமா செய்­த­தோடு, பெஸ்டின் வின்­செ­ன்டை மணந்து பெய­ரையும் மரியம் என மாற்­றிக் கொண்டார். இவரும் முஸ்லிம் அறக்­கட்­ட­ளையை சேர்ந்த பள்­ளியில் தானா­கவே முன்­வந்­து ஆசி­ரி­யை­யாக இல­வச சேவை அளித்த தக­வலும் வெளி­யாகி பர­ப­ரப்பை அதி­க­ரித்­துள்­ள­து.