உலகையே அச்சுறுத்திவரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு 285 இந்தியர்கள் பெயர்களுடன் புதிய கொலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

244

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சார்பில் புதிய கொலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 285 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள 4000 பேர் இடம்பெறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளோரின் பெயர் மட்டுமல்லாது, முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசு அதிகாரிகள் பிரபலமான இந்திய மென்பொருள் பொறியாளர்கள், நாட்டை பாதுகாக்கும் இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த தகவலை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு குறுந்தகவல் மூலமாகவும் பரப்பியுள்ளது.
ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த புதிய கொலைப்பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் பாதிப்பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.