இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு அபராதம் விதிப்பு….

184

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேனிடம் ஆக்கிரோஷமாக நடந்துகொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, டேவின் மிலானின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் உற்சாகமடைந்த அவர் ஆட்டமிழந்த வீரரிடம் ஆக்கிரோஷமாக நடந்துகொண்டார். அப்போது மைதானத்தில் இருவருக்குமிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், இஷாந்த் ஷர்மா ஐசிசி விதிகளை மீறி நடந்து கொண்டதாக போட்டி நடுவர்கள் அவர் மீது புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், இஷாந்த் சர்மாவுக்கு ஒரு டிமெரிட் புள்ளியும், போட்டியின் சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.