சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்ட விவகாரம் : ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை.

607

சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் பெங்களூரு சிறையில் விசாரணை மேற்கொண்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நகர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிகளை மீறி பல சலுகைகள் அவருக்கு அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக டிஐஜி ரூபா ஆதாரங்களுடன் தனது மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். மேலும், உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அரசு விதிமுறைகளை மீறி ஊடகங்களில் பேட்டியளித்ததாக டிஐஜி ரூபாவும், டிஜிபி சத்தியநாராயணாவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார் இன்று மேற்கொண்டார். பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.