IRNSS – 1 H என்ற வழிகாட்டும் செயற்கைக்கோள் வரும் 31ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும்..!

304

வழிகாட்டும் செயற்கைக்கோள் வரும் 31ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் நேவிகேசன் சேட்டிலைட் என்ற வழிகாட்டும் செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்து உள்ளது. IRNSS – 1 H என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் முழுக்க, முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடலில் மாயமாகும் கப்பல்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கவும், பேரிடர் மேலாண்மை மற்றும் வழிகாட்டுதல் போன்றவற்றுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆயிரத்து 400 கிலோ எடைகொண்ட இந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் வரும் 31ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே 7 வழிகாட்டும் செயற்கைக்கோளை இஸ்ரோ செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.