ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.

1071

ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு, சிறப்பு ரயில்கள் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதே, உணவையும் முன்பதிவு செய்துக் கொள்ள முடியும்.
இந்நிலையில், ரயில்வே துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதற்காக இணையதளத்தில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களும் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முடியாது என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
இதனிடையே, ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உயர்த்த ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. ரயில்களில் தரப்படும் உணவுகள் தரமற்றவையாக உள்ளதாக மத்தியத் தணிக்கைத் துறை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, தனது புதிய கொள்கையின் மூலம் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்த ஐ ஆர் சி டி சி முடிவு செய்துள்ளது.