ஈராக் நாட்டில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 9 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

301

ஈராக் நாட்டில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 9 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
ஈராக்கின் நாட்டின் மொசூல் நகரின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலை போலீஸ் படையினர் முகாமிட்டு இருந்தனர். அப்போது 4 கார்களில் வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டு வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள், போலீசார் முகாமிட்டு இருந்த இடத்திற்கு அருகே சென்று குண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்கள் தீக்கிரையாகின. இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி 9 போலீசார் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்