ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், 15 பேர் கொல்லப்பட்டனர்.

118

ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், 15 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே லாரியை கொண்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியாத் பிரிவு மக்கள் அதிகம் வாழும் சத்ர் நகரில் நடத்தப்பட்ட
இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைகள் மற்றும் மக்கள் நடமாட்டமுள்ள அதிகமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு, பாக்தாத் நகரில் நடைபெற்ற மிகவும் மோசமான தாக்குதல் இது ஆகும்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், ஐ.எஸ் அமைப்பினர் பாக்தாத் நகரில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.