ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அசுரப்பிடியில் இருந்து மோசூல் நகரை மீட்பதற்காக உச்சகட்ட தாக்குதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

297

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அசுரப்பிடியில் இருந்து மோசூல் நகரை மீட்பதற்காக உச்சகட்ட தாக்குதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மோசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அறிவித்தனர். மோசூல் நகரை தீவிரவாதிகளின் தலைமையிடமாக மாற்றிய அவர்கள், அங்கிருந்து உலகம் முழுவதும் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், மோசூல் நகரை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நடத்தி, அந்நகரை உடனடியாக மீட்குமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி உத்தரவிட்டார். இதையடுத்து, ஈராக் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. மோசூல் நகரை சூழ்ந்துள்ள தரைப்படையினர் அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.