ஈரானில் உணவின்றி தவித்து வரும் தமிழக மீனவர்கள் ..!

196

ஈரானில் உணவின்றி தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டனம் மீனவர்கள் 4 பேர் உட்பட, 21 மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்வதற்காக ஈரான் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு முகமது சலா என்பவரது விசைப்படகில் 6 மாதங்களாக மீன்பிடித்து வந்தனர். சம்பள பிரச்சினையால், விசைப்படகு உரிமையாளர் பாஸ்போர்ட்டை தராமல், மீனவர்களை துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகம் திரும்ப முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க மத்திய, மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.