ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று நாடு திரும்பினர்.

175

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று நாடு திரும்பினர். தங்களை மீட்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 15 பேர் மீன்பிடிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி துபாய் சென்றுள்ளனர். அப்போது எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக கூறி ஈரான் அரசு அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்தநிலையில், ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று நாடு திரும்பினர். 13 மீனவர்கள் சென்னைக்கும், 2 மீனவர்கள் ஷார்ஜாவில் இருந்து நேரடியாக திருச்சிக்கும் வந்து சேர்ந்தனர். விடுதலையான மீனவர்களை அவரது உறவினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். சிறையில் இருந்து மீட்க, மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டினர்.