பாக்தாத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர்.ஈராக் நாட்டின் தலை நகரமாக விளங்கும் பாக்தாத்தின் மத்திய பகுதியில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதைந்து பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலையடுத்து பாக்தாத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.