ஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு

83

ஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து, போயிங் 707 ரக சரக்கு விமானம் ஈரானுக்கு புறப்பட்டு வந்தது. ஈரான் கராஜ் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, மோசமான வானிலை காரணமாக, ரன்வேயில் இறங்குவதற்கு முன்பாக, கம்பி வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்ததிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.