புத்தாண்டு கொண்டாட்டத்தில் பரிதாபம் | 100 பேர் உயிரிழப்பு – 55 பேர் உயிருடன் மீட்பு

134

ஈராக் நாட்டில் நடைபெற்ற படகு விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரான் நாட்டின் மொசூல் நகரில் வசித்து வரும் குர்து இன மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பெரிய படகில் டைகரிஸ் ஆற்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து மீட்பு படகுகள் செல்வதற்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி மாயமான 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் மேலும் 60 பேர் பிணமாக மீட்கப்பட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஆக உயர்ந்தது. 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற இந்த கோர விபத்து அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.