ஈரான் மலைப்பகுதியில் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

544

ஈரான் மலைப்பகுதியில் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
பயணிகள் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்றது. 11 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானம் ஈரான் நாட்டு மலைப்பகுதி அருகே சென்றபோது திடீரென கீழே விழுந்து தீப் பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்ற மீட்பு படையினர் 11 பேரின் உடல்களையும் மீட்டனர். பலத்த காற்று மற்றும் கால நிலை மாற்றத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த வாரம் ஈரானில் நடைபெற்ற விமான விபத்தில் 66 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.