இறுதி போட்டியில் சென்னை – மும்பை பலப்பரீட்சை !!!

198

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை வெல்லப்போவது சென்னையா? மும்பையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலாக எழுந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த 2 மாதங்களாக விருந்து அளித்த ஐ.பி.எல். தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐதராபாத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு நடைபெறும் இறுதியாட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சாம்பியன் கோப்பையை வெல்லப்போவது சென்னையா? மும்பையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலாக எழுந்துள்ளது.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். நடப்பு சீசனில் மும்பையுடன் மோதிய மூன்று ஆட்டத்திலும் தோல்வியை தழுவிய சென்னை அணி, அதற்கு பழிதீர்க்கும் வகையில் உத்வேகத்துடன் தோனி தலைமையில் களமிறங்கும். இதனால் இன்றைய இறுதிப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.