12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டி | 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

76

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், டெல்லி கேப்பிடல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, காலின் முன்ரோ, ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் பொறுப்புடன் விளையாடினர். இறுதியில் டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன்களை குவித்தாலும், அடுத்து பேட்டிங் செய்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 18 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஐதராபாத் அணி, 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.