ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

91

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 26 லீக் போட்டி, கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்த அணியின் துவக்க வீரர் டேன்லி, முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் நிதான ஆட்டத்தால், அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சப்மேன் கில் 65 ரன்கள் எடுத்தார்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் ப்ருத்வி ஷா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்றொரு துவக்க வீரர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்தார். இதனால், 18 புள்ளி 5 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, புள்ளி பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.