ஐ.பி.எல் கிரிக்கெட் இன்றைய ஆட்டத்தில் சென்னை – டெல்லி அணிகள் மோதல் ..!

981

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.
புனேவில் இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது. . கடந்த போட்டியில் மும்பையுடன் தோற்ற சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதே நேரத்தில் 3 வது வெற்றி பெற டெல்லி அணி போராடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி இதுவரை ஆடிய 7 ஆட்டங்களில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதே போல் டெல்லி அணி இதுவரை ஆடிய 7 ஆட்டங்களில் 2 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியடைந்தும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.