சென்னையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து டிக்கெட் கட்டண தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் – ஐபிஎல் நிர்வாகம்

918

சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு புனேவில் நடத்த முடிவு செய்துள்ளன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை காண்பதற்காக டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்கள், அந்தத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.