சென்னை சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள் !

127

ஐபிஎல் 12-வது சீசன் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது இதையொட்டி போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டும் விமர்சையாக நடைபெறுகிறது. சென்னையில் இன்று தொடங்கும் 12-வது ஐபிஎல் போட்டியை காண சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் தங்களது உடலில் ஓவியங்களை வரைந்து மைதானத்துக்குள் செல்ல ஆயத்தமாகியுள்ளனர். 1500-க்கும் மேற்பட்டோர் டிக்கட் கிடைக்காமல் கவுண்டர்களில் காத்து கிடக்கின்றனர். கூட்டம் அலை மோதுவதால் பிளாக்கில் டிக்கட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினார். கடந்த முறை ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் போனது அதிர்ச்சியை அளித்ததாகவும் இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறுவது மகிழ்ச்சியை தருவதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்