சர்வதேச புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

287

சர்வதேச புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில், 70-வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக இன்று தொடங்குகிறது. இதையொட்டி பிரான்சில் சர்வதேச அளவிலான நட்சத்திரங்கள் குவியத் தொடங்கியுள்ளனர். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் ஒருநாள் முன்பாகவே அங்கு சென்றுள்ளார். அவர் இன்று நடைபெறும் தொடக்க விழாவில் சிவப்புகம்பளத்தில் பவனி வர உள்ளார். இந்த ஆண்டுக்கான கான்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் தலைசிறந்த 19 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் திரையிடப்படும் படங்கள் பல மாதங்களுக்குப் பிறகே திரையரங்குகளுக்கு வரும் என்று உலக திரைப்பட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். கான்ஸ் திரைப்பட விழாவைக் காண உலக சினிமா ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.