சர்வதேச போட்டியில் பதக்கங்கள் வென்ற 9 வீரர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.99.05 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்!

454

சர்வதேச அளவிலான போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள் 9 பேர் உள்பட 14 பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழக அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதன்படி ஆசிய தடகள சாம்பியன் ஷிப், உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 9 வீரர்களுக்கும், அவரது பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்படி பழனிசாமி 14 பேருக்கும் 99 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.