3ம் நபர் காப்பீடு திட்டம் இன்று முதல் அமல்..!

315

கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் விற்பனை ஆகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கார்களை பொறுத்தவரை 3 ஆண்டுகளாகவும், இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை 5 ஆண்டுகளாகவும் இருக்கும் என்றும், இதை அனைத்து பொது காப்பீடு நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தால், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை உயரக்கூடும். காரின் விலை 5 ஆயிரம் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரையிலும், இரு சக்கர வாகனத்தின் விலை 13 ஆயிர்ம் ரூபாய் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.