இன்சாட்- 3 DR செயற்கைகோளுடன்,GSLV – F 05 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுவதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது.

262

இன்சாட்- 3 DR செயற்கைகோளுடன்,GSLV – F 05 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுவதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இன்சாட் – 3 DR செயற்கைகோளுடன் GSLV – F 05 ராக்கெட் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள இன்சாட் – 3 DR செயற்கைகோள் அதிநவீன வகையில் வானிலை தொடர்பான தகவல்கள், கடல்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ராணுவத்துக்கு தேவையான தகவல்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நாளை மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ள GSLV – F 05 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 11.10 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.