விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராத் இன்று தனது சேவையை நிறைவு செய்ய உள்ளது

273

விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராத் இன்று தனது சேவையை நிறைவு செய்ய உள்ளது. மும்பையில் நடைபெறும் இதற்கான விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொள்கிறார்.
27 ஆண்டுகள் பிரிட்டிஷ் கடற்படையில் சேவை புரிந்த விமான தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விராத், கடந்த1987 ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி போர் கப்பலாக கருதப்படும் ஐஎன்எஸ் விராத், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய கடற்படைக்கு அரணாக விளங்கியது. மிக நெருக்கடியான கால கட்டங்களில் நாட்டை பாதுகாக்க உதவிய இக்கப்பல் இன்று தனது சேவையை நிறைவு செய்கிறது.
இன்று மாலை மும்பையில் நடைபெறும் ஐஎன்எஸ் விராத் வழியனுப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொள்ள உள்ளார்.