ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்

259

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம், நேரடியாக அன்னிய முதலீடு பெற, அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் ஒப்புதல் கிடைக்க, முன்னாள் நிதி அமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஆஜராக, கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ., தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம், பிப்ரவரி 2ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.