அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பனிச்சரிவில் சிக்கிய காதலியை காப்பாற்ற முடியாத சோகத்தில் காதலன் தற்கொலை..!

153

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பனிச்சரிவில் சிக்கிய காதலியை காப்பாற்ற முடியாத சோகத்தில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவர் ஹேடன் கென்னடி. இவர் தனது காதலி பெர்கின்சுடன், மொன்டானா மாகாணத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதில், ஹேடனும் அவரது காதலியும் பனியில் புதைந்து போயினர். ஹேடன் மட்டும் மீண்ட நிலையில், பெர்கின்சை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மிகவும் மனமுடைந்து காணப்பட்ட ஹேடன், தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக மொன்டானா பகுதியில் மலையேற்ற பயிற்சியில் ஹேடன் மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டிருந்ததையும், அப்போது இந்த விபத்து நடந்ததையும் அவரது குழுவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.