இந்தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 44 இலங்கை அகதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

122

கடந்த 11ம் தேதி இந்தோனேஷியாவின் ஆசே பகுதி லோகாங்கா கடல் பகுதியில் ஒரு படகு இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்ததை கண்ட அங்குள்ள மீனவர்கள் கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படை வீரர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மோசமான வானிலை காரணமாக படகில் வந்த அகதிகள் படகில் இருந்து தரையிறங்க முடியாமல் தவித்தது தெரியவந்தது. இந்த நிலையில் முறையான ஆவணம் இல்லாததால் இந்தோனேஷிய கடற்படையினர் அவர்களை தரையிறங்க மறுப்பு தெரிவித்தனர்.

இதனிடையே ஐ.நா. மனித உரிமை ஆணையம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகளின் நெருக்கடி காரணமாக கடந்த சனிக்கிழமை தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உதவ சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு இந்தோனேஷியா அனுமதி அளித்துள்ளது.