போதைப் பொருள் கடத்தல் வழக்கு. மரணத்தண்டனையை நிறைவேற்றுவதில் இந்தோனேசிய அரசு தீவிரம்

289

போதை பொருள் கடத்தல் வழக்கில், கைதான இந்தியர் உள்பட 14 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் இந்தோனேஷிய அரசு உறுதியாக உள்ளது.

இந்தோனேசியாவில், போதைப் பொருள் கடத்தியதாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த குர்தீப் சிங் என்பவரும் அடக்கம். இதேபோல், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்த மேலும் 13 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 14 பேருக்கும் ஒரே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற அந்த நாட்டு அரசு முடிவு எடுத்தது. தண்டனை நிறைவேற்ற உலகமெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள போதிலும், மரண தண்டனையை நிறைவேற்றுவதில் இந்தோனேஷிய அரசு விடாப்பிடியாக உள்ளது. இந்த நிலையில்

இந்தியர் குர்தீப் சிங்கின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில், “குர்தீப் சிங்கை காப்பாற்றுவதற்கான கடைசி நிமிட முயற்சியை மேற்கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.