இந்தோனிசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீதிகள் பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர்.

182

இந்தோனிசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீதிகள் பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் சத்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயர்ந்த கட்டிடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சிலர் சிக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 புள்ளி 5 ஆக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. பெங்காலு நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு, நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.