இந்தியாவின் 71 ஆவது சுதந்திர தின விழா இலங்கை யாழ்பாணத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

263

இந்தியாவின் 71 ஆவது சுதந்திர தின விழா இலங்கை யாழ்பாணத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
71 ஆவது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, இலங்கை யாழ்பாணத்திலும் இந்திய சுதந்திர தின விழா நடைபெற்றது. யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, துணைத் தூதரக ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். அவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், பல்வேறு முக்கிய தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.