இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது!

244

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 329 ரன்களை குவித்தது. இதையடுத்து இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ரன்களை குவித்தது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 96 பந்துகளில் 108 ரன்களை குவித்து அசத்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி சொற்ப ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.