உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணி கொலம்பியாவை வீழ்த்தி தங்கம் வென்று உள்ளது

221

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணி கொலம்பியாவை வீழ்த்தி தங்கம் வென்று உள்ளது
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் அபிஷேக் வர்மா,சின்ன ராஜூ ,அமான்ஜித் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய வில்வித்தை அணி அரையிறுதியில் அமெரிக்காவை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று நடந்த இறுதி போட்டியில் இந்திய அணி கொலம்பியாவை சந்தித்தது.இதில் 226க்கு -221 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி கொலம்பியாவை வீழத்தி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தீபிகாகுமாரி ஜப்பான் வீராங்கணையிடம் தோற்று போனார்.