மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் உலக சாதனை படைப்பாரா …

379

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் உலக சாதனை படைப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 191 ஆட்டங்களில் 5, 992 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 181 போட்டிகளில் 5959 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். எனவே இதனிடையே இன்று நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய தென்ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் 34 ரன்கள் எடுத்தால், அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடத்தை பிடிப்பார். மேலும் 41 ரன்கள் எடுத்தால் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற சாதனையை பிடிப்பார். முதலிடத்தை உள்ள எட்வர்ட்ஸ் தற்போது விளையாடத நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் கிளார்க் ஓய்வு பெற்று விட்டார். எனவே இன்று நடைபெறும் போட்டியில் மிதாலி ராஜ் சாதனை படைப்பார் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி மித்தாலி ராஜ் சாதனை படைத்தால் அவரின் சாதனையை முறியடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.