அரசு வழக்குகளை விசாரிக்கும் கமிஷன் இயக்குனராக இந்திய வம்சாவளி பெண் வழக்கறிஞர் நியமனம்..!

46

தென்னாப்பிரிக்காவின் அரசு வழக்குகளை விசாரிக்கும் கமிஷன் இயக்குனராக, இந்திய வம்சாவளி பெண் ஷமிலா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் அரசு வழக்குகளை விசாரிக்கும் கமிஷன் இயக்குனர் ஷான் ஆபிரகாம்ஸ், முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா-வுக்கு சாதகமாக செயல்பட்டதை அடுத்து, பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, இந்திய வம்சாவளிப்பெண் ஷமிலாவை, கமிஷன் இயக்குனராக நியமித்து, தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமாபோசா அறிவித்துள்ளார்.
கடந்த, 1986ல், வழக்கறிஞராக பணியை துவங்கிய ஷமிலா, முக்கிய வழக்குகளில் ஆஜராகி உள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், 9 ஆண்டுகளாக சட்ட ஆலோசகராக இருந்த ஷமிலா 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அரசு வழக்குகளை விசாரிக்கும் கமிஷன் இயக்குனராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.