இந்தியாவில் போக்குரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக பாட் டாக்ஸி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

867

இந்தியாவில் போக்குரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக பாட் டாக்ஸி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்தநிலையில், பாட் டாக்ஸி என்ற தானியங்கி வண்டியை இந்தியாவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 4 ஆயிரம் கோடி மதிப்பீல் தொடங்க உள்ள இந்த திட்டத்துக்கான ஏலம் விடும் பணி விரைவில் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக, ஹரியானாவில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதை போடப்பட்டு பாட் டாக்ஸியை இயக்க திட்டமிட்டுள்ளது. 5 பேர் செல்லக்கூடிய இந்த பாட் டாக்சி தரையிலும், அந்தரத்தில் தொங்கும் வகையிலும்,
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் முழுவதையும் தொலைவில் இருந்தே கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடதக்கது.TH27New Pod Taxicol