அதல பாதாளத்துக்கு சென்ற இந்திய ரூபாயின் மதிப்பு..!

340

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ளதால் விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தக போர் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. ஜூன் 19-ஆம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 ரூபாயாக சரிந்திருந்தது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அதன்பின்னர் ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக நிலைபெற்றது.

இந்த நிலையில், இன்றைய வர்த்தக நேர தொடக்கத்திலிருந்தே இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக சரிந்து 69.10 என்ற நிலையை எட்டியது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற பாதிப்புகளை இந்தியா சந்திக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.