இந்திய வீரர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன -இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி !

391

வெளிநாடுகளில் விளையாட உள்ள இந்திய வீரர்களுக்கு கடுமையான சவால்கள் காத்திருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக செயலாற்றி வருவதாகவும் ஆனால் அடுத்து வரும் ஓராண்டில் அவர்களுக்கான சவால்கள் கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அடுத்த 18 மாத காலத்தில் இந்திய அணியினர் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.