ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுக்களை குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த ரயில்துறை முடிவு செய்துள்ளது.

218

நாடு முழுவதும் ரயில்களில் நாள்தோறும் இருபது கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். தற்போதுள்ள முறைப்படி முன்பதிவு செய்தவர்கள்தான் ரயில்களில் பயணம் செய்ய முடியும். அவர்கள் பயணத்தை ரத்து செய்ய விரும்பினால் அதற்குரிய டிக்கெட்டுக்களையும் ரத்து செய்யவேண்டும். இதனால் பயணிகள்

ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் அந்த டிக்கெட்டுகளை மாற்ற முடியாது. அவர்களே தான் பயணிக்க முடியும். ஒருவேளை பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால் அந்த டிக்கெட்டுகளையும் ரத்து செய்ய வேண்டும். இப்போது ரெயில்வே புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் பயணத்தை ரத்து செய்தால் , அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த டிக்கெட்டுகளை மாற்றிக் கொடுக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இது தொடர்பாக ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மேற்கொண்ட நடவடிக்கைகளின் விவரம் வருமாறு:–
*முன்பதிவு செய்த டிக்கெட்டை ஒருவர், அவருடைய ரத்த சம்பந்தமான உறவினருக்கு மாற்றி கொடுக்கலாம்.
*இதன்படி அந்த குடும்பத்தில் உள்ள தாய், தந்தையர், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவி ஆகியோருக்கு மாற்றி கொடுக்க முடியும்.
*இப்படி மாற்றி கொடுப்பதற்காக குறைந்த பட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னர் தலைமை முன் பதிவு மேற்பார்வையாளரை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் அடையாள அட்டையின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.
* ஒரு கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால் தங்களது டிக்கெட்டுகளை அதே கல்வி நிறுவன மாணவர்களுக்கு மாற்றி கொடுக்கலாம். இதற்காக 48 மணி நேரத்திற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
*அரசாங்க அதிகாரிகள், தங்களது டிக்கெட்டுகளை பிற அரசாங்க நிறுவன அதிகாரிகளுக்கு மாற்றி கொடுக்கலாம். இதற்கும் 48 நேரத்திற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
* திருமண விழாவுக்கு செல்ல ஒட்டுமொத்தமாக முன்பதிவு செய்தவர்கள் ரத்து செய்ய நேர்ந்தாலும் இதேபோல மாற்றி கொள்ளலாம்.
*என்.சி.சி. பிரிவில் உள்ள மாணவர்களும் பயணத்தை ரத்து செய்ய விரும்பினால், அதே பிரிவில் உள்ள மாணவர்களுக்கு மாற்றி கொடுக்கலாம். இதற்காக 24 மணி நேரத்திற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். இதுபோன்ற பரிமாற்றம் ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படும்.