அடுத்த மாதம் 17 ம் தேதி முதல் ரயில்களில் ஆர்ஏசி இருக்கைகள் ஒதுக்கீட்டை அதிகரிக்கப் போவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

344

அடுத்த மாதம் 17 ம் தேதி முதல் ரயில்களில் ஆர்ஏசி இருக்கைகள் ஒதுக்கீட்டை அதிகரிக்கப் போவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் தற்போது ஆர்ஏசி ஒதுக்கீடு எண்ணிக்கை 5ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையை 7ஆக உயர்த்தி வழங்க உள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் 14 பேருக்கு கூடுதலாக ஆர்ஏசி ஒதுக்கீடு வசதி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

இதேபோல 3 அடுக்கு குளிர்சாதன ரயில் பெட்டியில் தற்போது 2ஆக உள்ள எண்ணிக்கையை 4ஆக அதிகரிப்பதன் மூலம், 8 பேருக்கு ஆர்ஏசி ஒதுக்கீடு வசதி கிடைக்க உள்ளது.

மேலும் 2 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் 2ஆக உள்ள எண்ணிக்கையை 3ஆக அதிகரிப்பதன் மூலம், 6 பேருக்கு இடவசதி உறுதியாகும் என்றும், இந்த வசதி வரும்17ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.