இந்திய கடற்படை தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் சாகச ஒத்திகை நிகழ்ச்சி!

632

இந்திய கடற்படை தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ராயல் இந்திய கடற்படை பின்னர் இந்திய கடற்படை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரையில் வீரர்களின் சாகச ஒத்திகை நடைபெற்றது. இதில் வீரர்கள் ஹெலிகாப்டரில் பறந்து பாராசூட் மூலம் கீழே குதித்து சாகசம் செய்தனர். மேலும் வீரர்களின் சாகசத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.