தமிழகத்தில் ராணுவ தளவாட அமைக்கப்படும் என பிரதமர் உத்தரவு ..!

728

தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் ராணுவ தளவாட அமைக்கப்படும் என பிரதமர் உத்தரவிட்டதை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணமாக இருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ராணுவம் தளவாடம் அமைக்கப்படுவதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகி மாவட்டங்கள் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்றும் அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.