இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள் -ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா!

171

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்று, ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கருத்து தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து கருத்து கூறிய ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, கல்வீச்சு நடக்கும்போது, திடீரென்று பயங்கர சத்தம் கேட்டதும் தான் பதறிவிட்டதாக தெரிவித்தார். இந்தச் சம்பவம் வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டை அதிகம் நேசிப்பதால் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் இந்தியாவில் பயணிப்பது கடினமாக இருப்பதாக ஆடம் ஜம்பா கருத்து தெரிவித்துள்ளார்.