இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் தொடரும் – கேப்டன் விராட்கோலி நம்பிக்கை!

398

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் தொடரும் என்று கேப்டன் விராட்கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வெற்றி திருப்தி அளிப்பதாக கூறினார். தொடரை வென்றதற்கு எல்லா வீரர்களின் பங்களிப்பும் காரணம் என்று கூறிய விராட் கோலி, . இந்த வெற்றிப் பயணம் கடைசி ஆட்டம் முடியும் வரை தொடரும் என தெரிவித்தார். வரும் ஆட்டங்களில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறிய அவர், களத்தில் இறங்கிய பிறகு எதிரணிக்கு கருணை காட்டக்கூடாது என்பது அணியின் அனைத்து வீரர்களுக்கும் தெரியும்.என்றும் தெரிவித்துள்ளார்.