ரவி சாஸ்திரிக்கு ரூ.1.20 கோடி ஊதியம் : மூன்று மாதங்கள் பணி செய்ததற்காக பிசிசிஐ வழங்கியது

357

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு, மூன்று மாத ஊதியமாக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேக்கு பிறகு ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான பணிக்காக ரவி சாஸ்திரிக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை ஊதியமாக பிசிசிஐ வழங்கி உள்ளது. இதேபோல் வெளிநாட்டு தொடரில் விளையாடியதற்காக வருவாய்ப் பகிர்வு அடிப்படையில், மகேந்திர சிங் தோனிக்கு 57 லட்சத்து 88 ஆயிரத்து 373 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. ராஞ்சி டிராபியில் பங்களித்ததற்காக ரவி சாஸ்திரி 69 லட்சம் ரூபாயும், தோனி 57 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளனர்.